பாகிஸ்தானை வீழ்த்த இந்திய படைகளுக்கு 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது.! பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • டெல்லியில், நேற்று பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
  • அதில், மோடி பேசுகையில், பாகிஸ்தானை வீழ்த்த இந்திய படைகளுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது என்று குறிப்பிட்டார்.

டெல்லியில், நேற்று பிரதமரின் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) வருடாந்திர பேரணி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே காஷ்மீரில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அதில் சில குடும்பங்களும், அரசியல் கட்சிகளும் பிரச்சினைகளை சாதகமாக வைத்திருந்தன. அதனால் அங்கு பயங்கரவாதம் வளர்ந்து வந்தது. ஆனால், பல ஆண்டுகளாக இந்த நாட்டை உலுக்கும் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. தற்போது, காஷ்மீர் மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளும் அமைதியான நிலையே காணப்படுகின்றன.

இந்நிலையில், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட 3 அமைப்புகளுடன் மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம், வரலாற்று சிறப்புமிக்கது என்றும், இந்தியாவிடம் 3 போர்களில் பாகிஸ்தான் தோல்வியடைந்து இருந்தாலும், இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகள், இதை வெறும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாக கருதப்பட்டன. ஏதேனும் நடவடிக்கை எடுக்க அனுமதி தருமாறு நமது ராணுவம் கேட்டால் கூட அவர்கள் அனுமதி அளிக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தானை வீழ்த்த இந்திய படைகளுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது என்று குறிப்பிட்டார். சுதந்திரம் அடைந்தபோது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்பவர்கள், தேவைப்பட்டால் இந்தியாவுக்கு வரலாம் என்று இந்தியா உறுதி அளித்தது. இது, காந்தியின் விருப்பம் என தெரிவித்தார்.

மேலும், 1950-ம் ஆண்டு, இந்திய பிரதமர் நேருவுக்கும், பாகிஸ்தான் பிரதமராக இருந்த லியாகத் அலிகானுக்கும் இடையே இதுதொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. எனவே, இந்தியாவின் நீண்டநாள் வாக்குறுதியைத்தான் நாங்கள் நிறைவேற்றுகிறோம். இந்த நாடுகளில் மதம் காரணமாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு அடைக்கலம் தருவது இந்தியாவின் கடமை. அவர்கள் அந்நாடுகளில் அநீதியை சந்தித்துள்ளனர். அதை சரி செய்யவும், வாக்குறுதியை நிறைவேற்றவும் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது எனவும், பாகிஸ்தான் ராணுவம், துப்புறவு பணிக்கு ஆள் தேவை என்று விளம்பரம் ஒன்று செய்து இருந்தது. அதில், முஸ்லிம் அல்லாதவருக்கு மட்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதாவது, பட்டியல் இனத்தவருக்கென அதுபோன்ற வேலையை ஒதுக்கி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆஸ்கர் விருது: இறுதி பட்டியலில் இந்திய குறும்படம்! ‘எமிலியா பெரெஸ்’ படம் 13 பிரிவுகளில் பரிந்துரை!

அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…

7 hours ago

“பொறுப்புக்கு பணம் வாங்கினாலும், கொடுத்தாலும் தூக்கிருவோம்”… இது தளபதி உத்தரவு – பொதுச்செயலாளர் ஆனந்த்.!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…

8 hours ago

டங்ஸ்டன் திட்டம் ரத்து: ‘தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி’… அரசியல் தலைவர்கள் வரவேற்பு.!

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…

8 hours ago

“மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப்…

10 hours ago

டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்த மத்திய அரசு! “பிரதமர் மோடிக்கு நன்றி” – அண்ணாமலை

சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

10 hours ago

மதுரை: டங்ஸ்டன் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு.!

மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…

11 hours ago