இந்நிலையில் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகள் முதலில் அம்ரித்ஸர் நகரில் அந்த விமானத்தை தரையிறக்கினர். பின் அந்த வுமானத்தை பாகிஸ்தானின் லாகூருக்குக் கொண்டுசெல்லவும் முயன்றனர். இறுதியாக , இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க துபாயில் இறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது ரூபின் என்ற பயணி தீவிரவாதிகளுக்கு எதிர்ப்புக் காட்ட, அவர் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டார். அவர் சடலத்துடன் சில பயணிகளை மட்டும் விடுவித்த தீவிரவாதிகள், துபாயில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு விமானத்தை ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தகார் நகரில் கொண்டு சென்றனர். அப்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு இருந்தது.
அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் மூலமாக, கடத்தல்காரர்களுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் தீவிரவாதிகள் தரப்பில் வைக்கப்பட்ட கெடுவில், ஜம்மு- காஷ்மீர் ஜெயிலில் அடைக்கப் பட்டிருந்த பயங்கரவாதிகளான ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசார், முஷ்டாக் அகமது ஜர்கர் மற்றும் அகமது ஒமர் சையது ஷேக் ஆகிய மூவரையும் விடுவிக்க வேண்டும் என்றனர். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங், தனி விமானத்தில் அந்தத் தீவிரவாதிகளை ஏற்றிச்சென்று ஒப்படைத்துவிட்டு, பயணிகளுடன் நமது விமானத்தை மீட்டு வந்தார். இதை தொடர்ந்து, விமானக் கடத்தலுக்குப் பிறகு அதிரடியாக களமிறங்கிய டெல்லி போலீஸார், அடுத்த சில தினங்களில் விமானக் கடத்தல்காரர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்ததுடன் கடவுச்சீட்டு எடுக்க உதவியதாக அப்துல் லத்தீப் (மும்பை), யூசுப் நேபாலி (நேபாளம்), தலீப்குமார் பூஜைல் (மேற்கு வங்காளம்) ஆகிய மூன்று பேரை மும்பையில் கைது செய்தனர். கடந்த 2000-மாவது ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த வழக்கு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. மார்ச், 2001-லிருந்து பஞ்சாப்பின் பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. கடந்த வருடம் ஜனவரி 18-ல்தான் விசாரணை முடிந்தது. மீதமுள்ள பாகிஸ்தானிகளான ஏழு பேர் பிடிபடாத நிலையில், எட்டு வருடங்களுக்குப் பிறகு பிப்ரவரி 5-ம் தேதி, கடத்தலுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது, பஞ்சாப் சிறப்பு நீதிமன்றம். இந்தியாவில் தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டு தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்டு பாகிஸ்தானில் சுத்த்ந்திரமாக திரியும் தீவிரவாதிகளை எப்போதுதான் இந்தியாவிடம் ஒப்படைக்கும் பாகிஸ்தான் என்று பார்ப்போம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…