இந்திய பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.!
இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் -7.7% ஆக வீழ்ச்சி காணப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வளர்ச்சியாக 4.2% ஆக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக நடப்பு 2020-21ல் பொருளாதார வளர்ச்சி -7.7% ஆக சரிவை சந்திக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது நாட்டின் பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி என தேசிய புள்ளியியல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 1951-52 ஆம் நிதியாண்டு முதல் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கணக்கிடப்பட்டு வரும் நிலையில், சென்ற 1979-80ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -5.2% ஆக சரிவடைத்திருந்தது.
கொரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், விவசாயம் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளின் வளர்ச்சி பின்னோக்கி சென்றுள்ளதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது.