மணிப்பூர் வன்முறை குறித்த இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் குறிப்பாணை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிப்பு..!
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறைக்கு மத்தியில் இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்ற வீடியோ வெளியாகி நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் (AIDWA) குறிப்பாணை, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த குறிப்பாணையை அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவருமான பிருந்தா காரத் சமர்ப்பித்தார்.