கொரோனாவுக்கு மருந்து தயாரித்த இந்திய நிறுவனங்கள்.. யார்யாருக்கு இந்த மருந்துகள் கொடுக்கலாம்? முழுவிபரம் இதோ!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி மருந்து நிறுவனங்களான சிப்லா, க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் ஹெட்டெரோ ஆகிய நிறுவனங்கள், கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளது.
சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் மிக தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் முன்னணி மருந்து நிறுவனங்களான சிப்லா, க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் ஹெட்டெரோ ஆகிய நிறுவனங்கள், கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தனர். அதில் சில மருந்துகள்,
க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ்:
க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் மருந்து நிறுவனம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, ஃபேபிஃப்ளூ என்ற பெயரில் ஆன்டிவைரல் மருந்தான ஃபாவிபிராவிரை அறிமுகப்படுத்தியது. மும்பையைச் சேர்ந்த இந்த மருந்து நிறுவனம், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஒப்புதலை பெற்று, மிதமான கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அதில் ஒரு மாத்திரையின் விலை, ரூ. 103 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
ஹெட்டெரோ நிறுவனம்:
அதனை தொடர்ந்து, ஹைதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் ஹெட்டெரோ எனும் மருந்து நிறுவனம், கொரோனா சிகிச்சைக்காக ரெம்டேசிவிர் மருந்தை “கோவிபோர்” (Covifor) எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இந்த மருந்துக்கு, Drug Controller General of India DCGI அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மருந்து, கொரோனவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்களில் சிகிச்சைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து, ஊசி மூலம் உடம்புக்குள் செலுத்தப்படும். 100 ml கொண்ட இந்த மருந்தின் விலை ரூ5,000-6,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிப்லா நிறுவனம்:
மற்றொரு இந்திய மருந்து நிறுவனமான சிப்லா நிறுவனம், தனது சொந்த ரெமிடெசிவிரை “சிப்ரேமி” (Cipremi) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்க்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்கலாம் என தெரிவித்தனர். மேலும், இந்த மருந்து மருந்துக்காக விலையை இன்னும் சிப்லா நிறுவனம் நியவிக்கவில்லை.