நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி எம்.பி-க்கள் போராட்டம்..!
கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், நேற்று, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி அவையில் பொய்யான தகவல்களை அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறினார் என குற்றம்சாட்டியிருந்தார்.
பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி குற்றச்சாட்டின் பேரில், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்றனர். பேரணியாக சென்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அம்பேத்கர் சிலையை நோக்கி, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் ‘ஆபத்தில் ஜனநாயகம்’ என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் பேரணியாகச் சென்றனர்.