கொரோனா வைரஸின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் டிசம்பரில் தொடங்கிய வைரஸ் உலகம் முழுவதும் இப்பொழுது பரவியுள்ளது. இந்த வைரஸ் பற்றி ஒரு இந்திய சிறுவன் அபிக்யா ஆனந்த், கடந்த ஆகஸ்ட் மாதமே கணித்திருக்கிறார். அதாவது கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை கணித்து கூறியுள்ளார். அதுபோன்றுதான் சீனாவில் டிசம்பர் மாதம் கொரோனா கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுவன், மிகவும் அரிதாக செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இந்த மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவை இணைவதால் அதிகமான கதிர்வீச்சு பூமியை தாக்கும் என்றும் அதேநேரம் சந்திரனும், ராகுவும் இணைவதும் சக்தி வாய்ந்ததாகும் என தெரிவித்துள்ளார். ராகு, உலகில் நோய்களை பரப்பும் என ஆனந்த் கணித்து கூறியுள்ளார். அதேபோல் தற்போது உலகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்நோயின் தாக்குதல் எப்போது குறையும் என மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திரும்பவும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸின் வேகம் எப்போது குறையும் என்பதையும் அந்த சிறுவன் ஆனந்த் கணித்துள்ளார். ஏப்ரல் 1 வரை கொரோனா தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும், பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்துக்கு பின் வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து மே 29ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும். இதையடுத்து பொருளாதார வீழ்ச்சியும், நவம்பரில் முடிவுக்கு வரும் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…