Categories: இந்தியா

வைர வியாபாரி நிரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பினார்! அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல்

Published by
Venu

வைர தொழிலதிபர் நிரவ் மோடி, வங்கிக் கடன் மோசடி வழக்கில் தலைமறைவான நிலையில்  பிரிட்டனுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி,  சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிரவ் மோடியின் மோசடி தொடர்பாக வங்கி நிர்வாகம் சிபிஐயில் அளித்த புகாரை அடுத்து, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையை அடுத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடி, மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும், அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைவருமான உஷா அனந்தசுப்பிரமணியன், செயல் இயக்குநர்கள் ப்ரஹ்மாஜி ராவ், சஞ்சிப் ஷரன், பொது மேலாளர் நேஷா அஹாத் உள்பட 25-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நிரவ் மோடி பிரிட்டனுக்கு தப்பிச்சென்றுவிட்டதாகவும், அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா மற்றும் பிரிட்டன் அதிகாரிகளின் கருத்தை சுட்டிக்காட்டி பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டன் அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஆலோசனைகளுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

7 minutes ago

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

42 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

1 hour ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

20 hours ago