9.344 லட்சம் கோடிகள் செலவு செய்து முப்படைகளை பலப்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு!
மத்திய அரசனது முப்படைகளையும் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் இன்னும் மேம்படுத்தும் நோக்கில் போர் விமானங்கள், போர் வாகனங்கள், போர் ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என தரைப்படை, கடற்படை ,விமானப்படை இந்த முப்படைகளுக்கும் தேவையான உபகரணங்களை இந்திய அரசாங்கம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதன்படி தரைப்படையை மேம்படுத்த 2600 போர் வாகனங்களும், 1700 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து விமானப்படைக்கு 110 போர் விமானங்களும், வடக்கு மேற்கு இந்திய எல்லைப் பகுதிகளில் ராணுவ தளவாடங்கள் அமைக்கப்படவும் உள்ளன. மேலும், கடற்படைக்கு 200 போர்க் கப்பல்களும், 500 விமானங்களும், 24 தாக்குதல் நடத்த தகுந்த நீர்மூழ்கிக் கப்பல்களும் வாங்க திட்டமிட்பட்டு உள்ளது. இவை அனைத்தும் இன்னும் மூன்று நான்கு வருடங்களில் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இதற்காக அரசானது 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாம். இந்திய மதிப்பில் 9.344 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.