லடாக்கின் பாங்காங் ஏரியில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா.!
யோகாவை ஊக்குவிக்கும் வகையில் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 9வது யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு, இன்று காலை லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி அருகே இந்திய ராணுவத்தினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, தலைநகர் டெல்லி கண்டோன்மென்ட்டில் யோகாசனம் செய்தார். மேலும், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா ஏற்பாடு செய்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியா முழுவதும், அமைச்சர் உள்ளிட்ட பலரும் பல்வேறு இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று, சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. யோகா மூலம் விழிப்புணர்வு, உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வின் நன்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.