இந்தியா-சீனா எல்லையில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு!
மத்திய அரசு, இந்தியா – சீனா எல்லையில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடையும் வீரர்களுக்கு 100 சதவீத ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பணிபுரியும் வீரர்கள் உயிரிழந்தாலோ படுகாயமடைந்தாலோ, அவர்கள் இறுதியாக வாங்கிய ஊதியத்தில் 100 சதவீதத்தை அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் பணிபுரியும் வீரர்களுக்கும் இதனை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோக்லம் பிரச்சினைக்குப்பின் இரு நாடுகளிடையேயான எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.