இராணுவத்தின் முப்படைகளும் கொரோனா எதிர்ப்பு பணியாளர்களுக்கு மரியாதை

Published by
Kaliraj
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊர​டங்கு நாட்களின் போதும்  ஆபத்தைப் பொருட்படுத்தாமல் முன்னிலையில் பணியாற்றிக்கொண்டிருக்கும், மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், ஊடகத்துறையினருக்கு ஆகியோருக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக
அந்த முன்னிலைப் பணியாளர்களுடன் ராணுவத்தின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக நாளை சில முக்கிய நடவடிக்கைகளில் முப்படை வீரர்கள் ஈடுபட உள்ளதாக இந்திய இராணுவ தலைமை தளவதி பிபின் ராவத்  ஏற்கனவே கூறினார்.
அதன் விளைவாக இன்று, இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் அந்த முதன்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்துள்ளனர்.  இதில், இந்த நிகழ்ச்சியில் மிக்-29, சுகோய்-30, ஆகிய விமானங்கள் டெல்லி வான்பரப்பில் 30 நிமிடங்கள் பறந்து மரியாதை செலுத்தியது.  இந்திய விமானப்படை ​மற்றும் கடற்படை ​ஹெலிகாப்டர்கள் மூலம் கொரோனா சிகிச்சை வழங்கும்  அனைத்து முக்கிய மருத்துவமனைகள், காவலர் நினைவு சின்னங்கள் மீது மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல்,  கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் கடலில் அணிவகுத்து மரியாதையும் இந்த முதன்மை பணியாளர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர் தால் ஏரி மேற்பரப்பில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பறந்து தங்கள் மரியாதையை செலுத்தினர். அதேபோல தலைநகர் டெல்லியில் இந்தியா கேட், தேசிய காவல்துறை நினைவு அருங்காட்சியகம், ஆர்எம்எல் மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளின் மேற்புறங்களின் மீது இந்திய விமானப்படையின் விமானங்கள் பறந்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களின் சேவையை பாராட்டினர். சென்னையில் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் ராணுவம் செலுத்திய மரியாதைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மருத்துவர்கள், செவிலியர்கள் கைகளை உயர்த்தி நன்றி தெரிவித்தனர்.

Recent Posts

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

1 hour ago

‘பகலில் ஒரு இரவு’ புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்.!

சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…

1 hour ago

பார்க்கிங் விவகாரம் : பிக் பாஸ் தர்ஷன் அதிரடி கைது!

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…

2 hours ago

“அதிக சம்பளம் வாங்கினால் அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென அர்த்தமல்ல” – விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி.!

கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

2 hours ago

எப்படிப்பா ஆடுற? ஒன்னும் புரியல! அபிஷேக் சர்மாவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

கொல்கத்தா :  அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…

3 hours ago

எலோன் மஸ்க் DOGE-யிலிருந்து வெளியேறுவாரா? டொனால்ட் டிரம்ப் விருப்பம் இது தான்.!

அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…

3 hours ago