ஜம்மு & காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இது ஒருபக்கம் என்றால் மறுபக்கம் லடாக்கில் சீனா வேறு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று திடீரென இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று வடக்கு காஷ்மீர் சென்றார். எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக ராணுவ வீரர்களை பாராட்டினார். எல்லையில் ஊடுருவலை தடுக்க இரவு, பகல் கண்காணிப்பை உறுதி செய்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்த அறிவுறுத்தினார். பின்னர் ஜம்மு காஷ்மீர் லெப்டின்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து, மாநிலத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதித்தார். இந்த திடீர் பயணம் இராணுவ வட்டாரங்களில் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…