ஜம்மு&காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்….

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்துள்ளனர். இதைக்கவனித்த இந்திய ராணுவத்தினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார். மேலும் இரு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக காயம் அடைந்த வீரர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025