நமது அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து இந்திய தன்னை தற்க்காத்துக்கொள்ளவும் பதிலடி தரவும் இந்திய இராணுவம் அவ்வபோது அதிநவீன இராணுவ தளவாடங்களை உருவாக்கியும்,கொள்முதல் செய்தும் நம் இராணுவத்தை நவீனப்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக,இந்திய ராணுவத்திற்கு 17 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் தென்கொரியாவின் ஹான்வ்ஹா நிறுவனத்தின் 104 கே30 ரக பிஹோ விமான எதிர்ப்பு இயந்திரங்கள் மற்றும் இந்த இயந்திரங்களுடைய தாக்குதல் ஆயுதங்களை சுமந்து செல்லும் 97ஆயுத வாகனங்கள் மற்றும் 39 கட்டளை வாகனங்கள் மற்றும் 4928 ஏவுகணைகள் மற்றும் 1,72,000 30 மில்லிமீட்டர் நீளமுள்ள தோட்டாக்களும் வாங்கப்பட உள்ளது.
இந்த இயந்திரத்தில் ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்களை சுடும் திறனுடையது.இதில் 30மில்லிமீட்டர் துப்பாக்கிகள் மற்றும் நான்கு ஏவுகணைகள் இருக்கும்.துப்பாக்கியின் இலக்கு தாக்குதல் எல்லை 3கிலோமீட்டர் மற்றும் ஏவுகணையின் இலக்கு தாக்குதல் எல்லை 7கிலோமீட்டர் வரை செல்லும் திறனுடையது ஆகும்.மேலும் 25 டன்கள் எடை கொண்ட இந்த தாக்குதல் வாகனம் 60கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் திறனுடையது.
மேலும் இது 570 கிலோமீட்டர் இயங்கும் எல்லை கொண்டது.இந்திய இராணுவத்திற்க்கு பல வருடங்களுக்கு பின்னர் இந்திய ராணுவத்தின் வான் எதிர்ப்பு ஆயுத தேவையை பூர்த்தி செய்ய தற்போது முயற்சி எடுக்கப்பட்டிருப்பது இந்திய மக்களிடையே மிகிழ்ச்சி அளிக்கிறது.வான் எதிர்ப்பு அதிநவீன இயந்திரங்கள் வாங்க இந்திய ராணுவம் நடத்திய தேர்வில் ரஷ்ய இராணுவ இயந்திரங்கள் தோல்வியடைந்தன.அதனால் இராணுவத்தினருக்கு தேவையான அதிநவீன இயந்திரங்கள் வாங்க தென் கொரியாவிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதனால் இந்திய இராணுவத்தின் புதிய அவதாரத்தால் உற்சாகமிகுதியில் திழைக்கின்றனர்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…