போர் ஆயுதங்களை அவசர தேவைக்கு 300 கோடி ரூபாய் வரை,கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ கொள்முதல் குழு கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவசர தேவைகளை சமாளிக்க ரூ. 300 கோடி வரை போர் ஆயுதங்கள் மற்றும் இயந்திர தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து, ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்: லடாக்கில் சீனாவின் அத்துமீறல் பிரச்னை தொடர்ந்து, எல்லையில் முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க நடவடிக்கையானது எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் வடக்கு எல்லையில் நிலவுகின்ற பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்யவும், இதர எல்லை பகுதிகளில், கண்காணிப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆராய ராணுவ கொள்முதல் குழுவின் சிறப்பு கூட்டமானது டெல்லியில் நடைபெற்றது.இதில், தரைப்படை, கடற்படை, விமானப் படை ஆகியவை அவசர தேவைக்கான இயந்திரங்கள் மற்றும் போர் ஆயுதங்கள் ஆகியவற்றை, வாங்க, சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு படைகளும், ஒரு திட்டத்தின் கீழ் ரூ. 300 கோடி ரூபாய் வரையில் கொள்முதல் செய்யலாம்.இதுபோல, ஒவ்வொரு திட்டத்திற்கும் போர் தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக தாமதமின்றி 6 மாதங்களில் கொள்முதல் தொடர்பாக முடிவெடுத்து ஓராண்டுக்குள் ஆயுதங்களை தருவிக்கவும் வழி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…