ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் இருந்தவர்களை மீட்க பாதுகாப்புப் படையினரின் தேடுதல் குழுக்கள் விரைந்துள்ளன. குரேஸ் பகுதியில் பனி படர்ந்த பகுதியில் இந்த விமான விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக பனி பெய்து வருகிறது.
இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இருந்த விமானி மற்றும் துணை விமானி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. விபத்து குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு பணி தொடங்கியது என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் (பிப்ரவரி 26) தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் காற்றின் வேகத்தில் வயலில் விழுந்து நொறுங்கியது. சம்பவத்தின் போது விமானத்தில் ஒரு விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகியோர் இருந்தனர்.
சென்னை : சினிமாத்துறையில் விவாகரத்து செய்திகள் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே, தனுஷ், இசையமைப்பாளர்…
ஹைதிராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் இப்படி அதிரடியாக இருக்கனும் என ஒரு காலத்தில் பெங்களூர் காட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இப்போது…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு…
18-வது சீசன் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 போட்டிகளிலும்…
சென்னை : திருச்சி மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக…