ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விபத்து!

Tejas Aircraft Crashes

plane crash : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. பாலைவனப் பகுதியான ஜெய்சால்மர் அருகே பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.!

அதாவது, செயல்பாட்டு பயிற்சியின்போது ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் காலனி பகுதியில் இந்திய விமானப்படை விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது தீப்பிடித்து எரிந்தது. பின்னர் உடனடியாக உள்ளூர் காவல்துறை, நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் பத்திரமாக உயிர்த் தப்பினார். மேலும் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்தபோதும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. எனவே, இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More – ரம்ஜான் நோன்பு தொடக்கம்…விடாமல் தாக்கும் இஸ்ரேல்! 24 மணி நேரத்தில் 67 பலி…

இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படையும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அந்த பதிவில், இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் ஜெய்சால்மரில் இன்று பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. விமானி பத்திரமாக உயிர் தப்பிய நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்