மிஷன் சக்தி ஏவுகணை திட்டம் வெற்றி: பிரதமர் மோடி அறிவிப்பு
- எதிரி நாட்டை ஏவுகணைகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் மிஷன்சக்தி திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்
இன்று காலை 11.45க்கு நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியை அறிவிப்பதாக கூறியிருந்தார்.
அவரது அறிவிப்புகளில் முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது…
- எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் மின்சக்தி திட்டம் வெற்றி பெற்றுள்ளது
- நமது ஆன்ட்டி-சாட்டிலைட் ஏவுகணை 3 நிமிடத்தில் ஒரு இயங்கும் நிலையில் உள்ள செயற்கைக்கோளை அளித்துள்ளது
- இந்த திட்டத்திற்கு பெயர் மின்சக்தி ஆகும்
- இந்த ஏவுகணைக்கு பெயர் A-SAT என்பதாகும்
- பூமிக்கு அருகில் உள்ள ஆறுகளில் உள்ள செயற்கைகோள்களை அளிக்க இந்த ஏவுகணை பயன்படும்
- மிஷன்சக்தி திட்டம் கடந்த பல ஆண்டுகளாக நெருங்க முடியாத ஒரு சாதனையாக இருந்தது
- மிஷன்சக்தி திட்டத்தின் மூலம் இயங்கும் நிலையில் உள்ள எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை அளிக்கும் வல்லமை வாய்ந்த நாடுகளான அமெரிக்கா ரஷ்யா மற்றும் சைனாவை அடுத்து இந்தியா நான்காவது நாடாக இணைந்துள்ளது
- விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது – பிரதமர் மோடி
இவ்வாறு பேசியுள்ளார் நரேந்திர மோடி