இந்தியரின் குடியுரிமையை குடியுரிமை சட்டம் பறிக்காது-பிரதமர் மோடி ட்வீட்
- அண்மையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்தது.
- யாருடைய குடியுரிமையையும் குடியுரிமை சட்டம் பறிக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
ஆனால் இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.முதலில் வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்து தற்போது தென் மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.எதிர்ப்பு இருக்கும் நிலையில் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு சிலஇடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
#IndiaSupportsCAA because CAA is about giving citizenship to persecuted refugees & not about taking anyone’s citizenship away.
Check out this hashtag in Your Voice section of Volunteer module on NaMo App for content, graphics, videos & more. Share & show your support for CAA..
— narendramodi_in (@narendramodi_in) December 30, 2019
இந்நிலையில் குடியுரிமை சட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்தியாவில் வசிக்கும் யாருடைய குடியுரிமையையும் குடியுரிமை சட்டம் பறிக்காது.பாதிக்கப்பட்ட அகதிகளுக்கும் குடியுரிமை அளிப்பதே இந்த சட்டத்தின் நோக்கம் ஆகும் என்று பதிவிட்டுள்ளார்.