பிபின் ராவத் சிறப்பான சேவையை இந்தியா என்றும் மறக்காது – பிரதமர் மோடி
முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியறது தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்கள் நாளை டெல்லி கொண்டு செல்லப்படவுள்ள நிலையில், அவர்களது இறுதி சடங்கும் டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் குடியறது தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
பிரதமர் மோடி : இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக, பாதுகாப்பு சீர்திருத்தங்கள் உட்பட நமது ஆயுதப் படைகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் ஜெனரல் ராவத் பணியாற்றினார். அவரது சிறப்பான சேவையை இந்தியா என்றும் மறக்காது.
ஜெனரல் பிபின் ராவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். ஒரு உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை நவீனமயமாக்குவதில் பெரிதும் பங்களித்தார். மூலோபாய விஷயங்களில் அவரது நுண்ணறிவு மற்றும் முன்னோக்குகள் விதிவிலக்கானவை. அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓம் சாந்தி.
Gen Bipin Rawat was an outstanding soldier. A true patriot, he greatly contributed to modernising our armed forces and security apparatus. His insights and perspectives on strategic matters were exceptional. His passing away has saddened me deeply. Om Shanti. pic.twitter.com/YOuQvFT7Et
— Narendra Modi (@narendramodi) December 8, 2021
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் : ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ஜியின் அகால மரணம் குறித்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்ததை அறிந்தது, எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் கடமையைச் செய்யும்போது இறந்த ஒவ்வொருவருக்கும் சக குடிமக்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
It’s deeply painful for me to learn of the loss of lives in the chopper crash. I join the fellow citizens in paying tributes to each of those who died while performing their duty. My heartfelt condolences to the bereaved families.
— President of India (@rashtrapatibhvn) December 8, 2021