அமெரிக்கா பின்லேடனை பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்கியது போல் இந்தியாவும் தாக்கும்!! அருண் ஜேட்லி எச்சரிக்கை
- இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் போர் ரக விமானத்தை இந்தியாய் விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியது.
- ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.
இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 26 ஆம் தேதி) அதிகாலை மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.இதற்காக 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை தெரிவித்தது.மேலும் இந்த பகுதிகளில் இருந்த 3(பாலக்கோடு,சாக்கோட், முஸாஃபராபாத்) இடங்களில் உள்ள தீவிரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.மேலும் விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்.
ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.இந்த தாக்குதல் 21 நிமிடங்கள் நீடித்தது.
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகின்றது.ஆனால் இந்தியா தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றது.மேலும் தற்போது மத்திய அரசு இந்தியா பயங்கரவாதிகள் முகாம் மீது சக்திவாய்ந்த 6 குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.
பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது:
இன்று பாகிஸ்தான் ராணுவம் F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்தது இதை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது என்று விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் உள்ளிட்ட பாகிஸ்தான் எல்லை பகுதியில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கபட்டுள்ளது.இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.இதனால் இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் தொடர் பதற்றம் நீடிக்கின்றது.
பிரதமர் மோடி ஆலோசனை:
இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தற்போதைய சூழல் குறித்து பிரதமரிடம் விளக்கி வருகின்றார்.
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர் சந்திப்பு:
இந்நிலையில் இதன் பின்னர் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில்,ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும்.அமெரிக்கா போலவே இந்தியாவும் பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்க முடியும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.