இலங்கைக்கு, இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
இலங்கை மக்களுடைய நலனை இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்.
இலங்கையில் பரபரப்பான சூழல் நிலவை வரும் நிலையில், இலங்கைக்கு, இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், இலங்கை மக்களுடைய நலனை இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும். இலங்கையின் பொருளாதாரம் மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும். இலங்கையில் ஜனநாயகம், உறுதி தன்மை, பொருளாதார மீட்சி ஏற்படுவதை இந்தியா முழுமையாக ஆதாரவளிக்கிறது.
மிக அருகில் உள்ள அண்டை நாட்டுடன் வரலாற்று ரீதியான தொடர்பை கொண்டுள்ளது இந்தியா. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு ரூ.27,000 கோடி மதிப்புள்ள உதவியை இந்தாண்டு இந்தியா வழங்கியது. தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து இலங்கை மக்கல் மீண்டும் வர உதவி செய்தது இந்தியா. இந்திய மக்களும் உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளனர். எனவே ஜனநாயக முறையில் மக்கள் எடுக்கும் முடிவுகளை இந்தியா ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.