இந்தியா – சீனா மோதல், பேச்சுவார்த்தை, தாக்குதல் என்ன நடக்கிறது ?

Published by
murugan

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்தியா – சீனா மோதல்கள்:

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குட்பட்ட  பகுதியில் இந்திய ராணுவத்தினர் சாலை பணிகளை மேற்கொண்டனர். அதற்க்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், கடந்த மே மாதம் பாங்கோ லேக் பகுதியில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். இதையடுத்து, பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில்  உடன்பாடு ஏற்படவில்லை.

இதனிடையே எல்லை பகுதியில் சீனா போர் விமானங்கள்,ஆயுதங்கள் மற்றும் வீரர்களை குவித்தது. இதனால் சீனா, இந்தியா இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.  லடாக் எல்லை பகுதியில் கடந்த பல வாரங்களாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 6-ம் தேதி சீன எல்லையில் இரு நாட்டினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இரு நாட்டு படைகளும் பின்வாங்கின.

இந்நிலையில், எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுவதாக தெரிவித்த நிலையில், தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா, சீனா ராணுவம் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும்  2 ராணுவ வீரர்கள் என 3 பேர் உயிரிழந்தனர்.

முப்படைகள்  ஆலோசனை :

இதுகுறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்து உள்ளது. அதில், கல்வான் பள்ளத்தாக்கில் துப்பாக்கிச் சண்டை நடக்கவில்லை. சீன வீரர்கள் கல்வீசி தாக்கியதில் தான் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து  சீனப்படை வெளியேறும் போது, வன்முறை ஏற்பட்டது என இந்திய ராணுவம் விளக்கம் கொடுத்து உள்ளது. மேலும், வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

எல்லையில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகள் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். லடாக் பகுதியில் நடந்த மோதலில் 5 சீன வீரர்களும் பலியானதாகவும், 11 வீரர்கள் காயமடைந்ததாகவும் சீன ஊடகம் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஒருதலைப்பட்சமாக நடக்க வேண்டாம்.!

இது குறித்து கருத்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இந்தியா அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் அதன் முன்னணி துருப்புக்களைத் தடுக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றார் .எல்லையைத் தாண்ட வேண்டாம், சிக்கலைத் தூண்ட வேண்டாம், இது மேலும் எல்லை நிலைமையை சிக்கலாக்கும் எனவும் இந்த பிரச்சனையில் இந்தியா ஒருதலைப்பட்ச நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறினார் .

 

 

Published by
murugan

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

6 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

8 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

10 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

10 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

11 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

12 hours ago