தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டை போலவே, கர்நாடகாவில் எருமைகளுடன் ஓடும் கம்பாலா எனும் பாரம்பரிய விளையாட்டு நடைபெற்று வரும். அந்த போட்டியின்போது, சினிவாச கவுடா எனும் கட்டிட தொழிலாளி, 9.55 வினாடிகளில் 100 மீட்டர் தூரம் ஓடினார்.
அந்த வீடியோ, நாடு முழுவதும் வைரலானது. மேலும், மத்திய விளையாட்டு துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு பார்வைக்கும் சென்றது. அதனை பார்த்த அமைச்சர், சினிவாச கவுடா போன்ற வீரர்களை ஓலிம்பிசுக்கு தயார் படுத்தினால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார்.
இந்நிலையில், அவரை பெங்களூரில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஆதோரிட்டி ஆப் இந்தியா பயிற்சி கூடத்திற்கு வருகைதந்து பயிற்சி எடுக்குமாறு அழைப்பு விடுத்தார். மேலும், அதற்கான ரயில் டிக்கெட்களையும் அவருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சீனிவாச கவுடா அங்கு வரவில்லை.
இதுகுறித்து அவரை தொடர்புகொண்டு கேட்கையில், “ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது வேறு, கம்பாலாவில் ஓடுவது வேறு. எனக்கு கம்பாலாவில் விளையாடுவது தான் பிடித்துள்ளது எனவும், அங்கு நடைபெறும் பயிற்சிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை” என கூறினார்.
மேலும், தான் மார்ச் 10ஆம் தேதி வரை கம்பாலா போட்டிகளில் பிஸியாக இருப்பேன். என கூறி மத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இதனை அறிந்த மத்திய அமைச்சர், இன்று அளித்த பேட்டியில், பாரம்பரிய தற அளவு வேறு, ஒலிம்பிக் தர அளவு வேறு என கூறினார். மேலும், அங்கீகாரபூர்வமான பயிற்சி அல்லது சோதனைகள் நடத்திதான் சினிவாச கவுடாவின் திறமை உறுதி செய்யப்படும் என கூறினார்,
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…