மீண்டும் இந்தியா – பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருவதால், இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடன் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் காலவரையற்ற தடையாக இருக்காது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தியா – பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். ஜனவரி 23-ம் தேதி வரை வாரத்துக்கு 15 விமானங்கள் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…