பாகிஸ்தான் துணைத் தூதரிடம் இந்தியா விசாரணை…!!
- இந்தியாவை தாக்க வந்த விமானம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
- இந்திய விமானப்படை விமானியை பாகிஸ்தான் கைது செய்ததாக கூறியது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் மீது பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வந்தது இந்நிலையில் பாகிஸ்தான் விமானத்தை இந்திய எல்லையில் விமானப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.இதில் இந்திய விமானப் படை விமானம் விழுந்து அதன் விமானியை பாகிஸ்தான் கைது செய்ததாக சொல்லப்படுகின்றது.
மேலும் இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிற்கான பாகிஸ்தான் துணைத் தூதர் சையது ஹதர் ஷா விற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது . இதனைத் தொடர்ந்து அவர், வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் ஆஜராகினர். அவரிடம் இது குறித்து விசாரித்ததாக கூறப்படுகின்றது.