6 கொரோனா சோதனை இயந்திரங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி!
கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், 6 கொரோனா சோதனை இயந்திரங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 24,506 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 780 பேர் இறந்துமுள்ளனர். இந்நிலையில், தற்பொழுது அமெரிக்காவிலுள்ள ரோச் எனும் நிறுவனத்திடமிருந்து 6 அதிவிரைவு கொரோனா சோதனை கருவிகளை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் சிறிவாஸ்தவா கூறியுள்ளார்.
அவர்களது அமெரிக்க நாட்டிலும் இதன் தேவை அதிகமிருந்தால், இந்தியாவுக்கு கருவிகளை அனுப்ப ட்ரம்பின் நிர்வாகம் சம்மதித்துள்ளதாம். இந்த கருவி மூலம் எட்டாயிரம் சோதனைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியுமாம்.
மேலும், கடந்த வாரம் சீனாவிலிருந்த்து 24 விமானங்களில் 400 டன் மருத்துவ பொருட்கள் வந்துள்ளதாம். மேலும், 20 விமானங்களில் மருத்துவ பொருட்கள் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார் வாஸ்தவா.