2040ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய எரிசக்தி தேவையில், இந்தியா 25% பங்களிக்கும்- ஹர்தீப் பூரி
2024ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய எரிசக்தி தேவையில் இந்தியா 25% பங்களிக்கும் என்று ஹர்தீப் பூரி கூறியுள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2040ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய எரிசக்தி தேவையில், இந்தியா 25% பங்களிக்கும் என்று கூறினார். உலக நாடுகளுக்கு, இந்தியாவிலிருந்து 25% எரிசத்தி அனுப்பப்படும்.
இதற்கு தேவையான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுவருவதாகவும், 2030ஆம் ஆண்டிற்குள் எரிசத்தி உற்பத்திக்கு தேவையான பரப்பளவை 1மில்லியன் சதுர கி.மீ க்கு அதிகரிக்க உள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். மேலும் 2025க்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் அரசின் திட்டத்தையும் அவர் எடுத்துரைத்தார்.