2029-ல் ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்!!
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் எழுதிய அறிக்கை, 2014ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றத்தின் காரணமாக, 2029ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய வளர்ச்சி விகிதத்தை பராமரிக்கும் பட்சத்தில், 2027ல் ஜெர்மனியையும், 2029ல் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பிடிக்கும். 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற போது இந்தியா 10வது இடத்தில் இருந்தது. தற்போது இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது.