அழியப்போகும் இந்தியா..! அதிரவைத்த அமெரிக்க பல்கலை கழகம்..!
தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் மணல் கொள்ளை, டாஸ்மாக் சேலம் மற்றும் ஈரோடு மலைகள் விற்கும் முயற்சி, தேனீ நியூட்டிரினோ திட்டம் என தமிழகத்தில் மக்கள் பாதிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து திணித்துவருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ‘டியூக்’ என்ற பிரபல பல்கலைக்கழக நிபுணர்கள் இந்தியாவில் உள்ள அணைத்து பகுதிகளிலும் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஆறுகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் தீவிர ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
ஆராய்ச்சியின் முடிவில், அமெரிக்க நிபுணர்கள் அதிர்ந்து போய் உள்ளனர், ”இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் ”யுரேனியா” விஷம் அதிக அளவில் பரவி உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்”. இதில் முக்கியமாக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் 324 நன்னீர் கிணறுகளில் உள்ள நீரை ஆய்வு செய்ததில், மிக மிக அதிக அளவில் ”யுரேனிய விஷம்” கலந்துள்ளதை கண்டு அதிர்ந்து போய் உள்ளனர்.
அதாவது, நாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோ கிராம் யுரேனியம் இருக்க வேண்டும். ஆனால் அந்த குடிநீரில் அளவுக்கு அதிகமாக உள்ளது. மேலும், இத்துடன் ”நைட்ரேட்” மாசுவும் கலந்து உள்ளது மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில், ஆய்வு செய்ததில், தமிழ்நாடு உட்பட பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மே.வங்காளம், குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உள்ளிட்ட 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய விஷம் கலந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த நீரை பயன்படுத்தி விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் யுரேனியத்தின் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு, அதிக அளவிலான மக்கள் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுது அவதிப்படலாம் என தெரிவித்துள்ளனர்.
எனவே இந்திய அரசுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக இதற்கு சரியான முடிவு எடுக்குமாறும் இந்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.