விரைவில் 3-வது இடத்திற்கு முன்னேறவுள்ள இந்தியா!

Default Image

உலக அளவில் பாதிப்பு பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் 3-வது இடத்துக்கு வரும்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாங்கி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில், 7,597,301 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 423,844 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,86,579-ல் இருந்து 2,97,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,498 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,47,195 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், உலக அளவில் பாதிப்பு பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் உள்ள இந்தியா, விரைவில் 3-வது இடத்துக்கு வரும் என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori