உருமாறிய கொரோனா வைரஸை வெற்றிகரமாக கையாண்டுள்ளது இந்தியா- ஐசிஎம்ஆர் பாராட்டு

Default Image

இங்கிலாந்தில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸை  இந்தியா வெற்றிகரமாக கையாண்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)  தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே  50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.இந்தியாவும் விமான சேவையை நிறுத்தி உள்ளது.பின்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.மேலும் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு புதிய உருமாறிய  தொற்று உறுதியானால் மத்திய அரசே முதலில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, தினமும் மத்திய அரசு உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது.அந்த வகையில் இந்தியாவில்  இதுவரை 29 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)  தனது ட்விட்டர் பக்கத்தில் பதியிட்டுள்ள பதிவில்,இங்கிலாந்தில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸை  இந்தியா வெற்றிகரமாக கையாண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரித்தல், அவர்களை வெற்றிகரமாக தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.எந்தவொரு நாடும் இதுவரை இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்டது இல்லை என எந்த தகவலும் இல்லை என்றும்  கூறியுள்ளது ஐ.சி.எம்.ஆர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்