இறக்குமதி கூடாது! சீன மின் சப்ளை இறக்குமதியும் கட்??! மத்திய அரசு அதிரடி

Default Image
“சீனா.,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மின் வினியோக சாதனங்களை இறக்குமதி செய்ய கூடாது. இந்தியாவின் மின் வினியோகத்தினை சீன முடக்கும் அபாயம் இருப்பதால் இறக்குமதி செய்யக் கூடாது என்று மின் வினியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது”.

லடாக் எல்லைப்பிரச்னைக்குப் பின், சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை  விதிக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை , மெட்ரோ ரயில் ஒப்பந்தங்கள், போன்றவைகளை சீன நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை என, அத்துறை முடிவு செய்து உள்ளது. அதன் முன்னோட்டமாக இந்திய ரயில்வே, ‘சிக்னல்’ திட்டம் தொடர்பாக, சீன நிறுவனத்திற்கு வழங்கி இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது.

இந்நிலையில், மத்திய மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங்., மாநில மின்துறை அமைச்சர்களுடன் நேற்று திடீரென ‘வீடியோ கான்பரன்ஸ்’ முலமாக பேசினார். அமைச்சர்களிடம்  சிங் கூறியதாவது: இந்தியாவில் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இருந்த போதும், ஆண்டுக்கு 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள மின் சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.அதில், சீனாவின் பங்கு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய்.

இந்த அளவிற்கு வர்த்தக வாய்ப்பளிக்கின்ற இந்திய நாட்டில், சீனா அத்துமீறியுள்ளதை ஏற்க முடியாது. அதனால், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, மின் சப்ளை சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம்.இப்பொழுது , பி.ஆர்., எனப்படுகின்ற முன்னுரிமை அந்தஸ்தின் கீழாகவே அண்டை நாட்டு பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.இனி, சீனா, பாக்., பொருட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட மாட்டாது.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மின் சாதனங்களில், ‘மால்வேர் அல்லது ட்ரோஜன்’ ஆகிய வைரஸ்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அவற்றின் மூலமாக  எங்கிருந்தும், இந்திய மின் வினியோகத்தை முடக்குகின்ற ஆபத்து உள்ளது.எனவே அதனால், மின் வினியோக நிறுவனங்கள், சீன நிறுவனங்களின் மின்சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம்.

அப்படியே இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் எதுவும் ஏற்பட்டாலும், அதற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்று தான் இறக்குமதி  வேண்டும். அவ்வாறு இறக்குமதியாகும் சாதனங்கள், பலகட்டமாக ஆய்வு செய்யப்படும். அதில் அரசுக்கு  திருப்தியில்லையெனில் திருப்பி அனுப்பப்படும்.

மத்திய அரசின், ‘உதய்’ உள்ளிட்ட மூன்று திட்டங்களில் இணைந்துள்ள மாநிலங்களில், மின் வினியோக நிறுவனங்களின் நிதியுதவிக்கு, புதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, மின் வினியோக நிறுவனங்களின் இழப்பை குறைப்பதற்கான திட்டங்களை  சமர்ப்பிக்க வேண்டும்.இதனைப் பின்பற்றாத மின்நிறுவனங்களுக்கு, கடன் அல்லது மானியம் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில் தான் மத்திய அரசு  பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து மின்சாதனங்கள் இறக்குமதிக்கு, மின் வினியோக நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்கிற அரசாணையை நேற்று மாலையே மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்