Categories: இந்தியா

மாநிலங்கள் வாரியாக இந்திய பிரிக்கப்பட காரணம் என்ன?

Published by
Venu

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிபகுதிகளும் !

இந்தியாவில்   29 மாநிலங்களும் ,டெல்லி தேசிய தலைநகரப் பகுதி  உள்ளிட்ட 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும்  உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால்        நியமிக்கப்படும் ஆளுநர்களைக்  கொண்ட, குடியரசுத்தலைவரின்  நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ்   மொழிவாரி மாநிலங்கள்  உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள்  என்ற சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 
தற்போதைய இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம், பூட்டான்  ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிராந்திய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சமஷ்தாணங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அஜ்மர்-                    மேர்வாரா,அசாம்,பலுச்சிஸ்தான்,வங்காளம்,பீகார்,பம்பாய்,மத்திய மாகாணங்களும்,பெராரும்,கூர்க்,டெல்லி ,மதராசு,வடமேற்கு எல்லை,ஒரிசா,பஞ்சாப்,சிந்து மற்றும் ஐக்கிய மாகாணங்கள்.                  பிராந்திய  இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன. இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத்  தொடக்கம், மிகச் சிறிய சமஸ்தானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன.போத்துக்கீச இந்திய.கோவா,தமனும் தியவும்,தட்ராவும் நாகர் ஹவேலியும்  ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும்,பிரெஞ்ச் இந்தியா,சண்டர்நகர்,ஏனாம்,பாண்டிச்சேரி ,காரைக்கால்,மாகே  ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன.
Image result for இந்திய பாகிஸ்தான் பிரிவினை
1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமஸ்தானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. ஜம்மு காஷ்மீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார்.
1950 ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அசாம்,மேற்கு வங்காளம்,பீகார்,பம்பாய்,மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும்,பெராரும்) மதராஸ்,ஒரிசா,பஞ்சாப்,உத்தரப் பிரதேஷம்(முன்னால் ஐக்கிய மாகாணங்கள் )
சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் பாசல் அலி   என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம்   அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை சீரமைக்க அறிவுறுத்தியது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் 1956 ஆம் ஆண்டில் மாநில சீரமைப்பு சட்டம்  நிறைவேற்றப் பட்டது. இந்தியா 14 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதே அடிப்படையில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீஸ்கர், உத்திராஞ்சல் மற்றும் ஜார்கண்ட் என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திர பிரதேசத்தில்  இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Recent Posts

SA vs IND : இரண்டு சதம் …தொடரை கைப்பற்றிய இந்திய அணி! சஞ்சு, திலக் அதிரடியில் துவம்சமான தென்னாப்பிரிக்கா!

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

5 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

6 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

7 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

8 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

9 hours ago