சீனாவை சார்ந்திருப்பதை குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் கூறியுள்ளார்.
சீனாவுடனான ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியா, கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, சீனாவை சார்ந்திருப்பதைக் குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் சுமன் பெர்ரி கூறினார். மருந்து பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சில முக்கியமான பொருட்களுக்கு சீனாவை சார்ந்திருப்பதை குறைப்பதில், இந்தியாவின் கவனம் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் சீன சுங்கத்துறை வெளியிட்ட தகவல்களின்படி, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் 2022 இல் 135.98 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், அதே நேரத்தில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல் முறையாக 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது. சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க, இந்தியா ஒரு துறை வாரியான யுக்தியை வகுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தியச் சந்தையைப் பிடிக்க விரும்பும், சீன நிறுவனங்களை தடுக்கவேண்டும், என்று பெரி வலியுறுத்தினார். இந்தியாவிற்கான சீனாவின் ஏற்றுமதி 118.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 21.7 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து சீனாவின் இறக்குமதிகள் 17.48 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 37.9 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…
துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம்…