லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்தனர்.ஆனால் சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை .
இதற்கிடையில் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
எல்லையைத் தாண்ட வேண்டாம், சிக்கலைத் தூண்ட வேண்டாம் :
இது குறித்து கருத்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் திங்களன்று இந்திய துருப்புகள் தான் இரண்டு முறை எல்லையைத் தாண்டி, “சீன ராணுவத்தினரை தூண்டிவிட்டு தாக்கினர் , இதன் விளைவாக இரு தரப்பிலும் எல்லைப் படைகளுக்கு இடையே கடுமையான ஏற்பட்டன என்று தெரிவித்தார் .
இந்தியா அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் அதன் முன்னணி துருப்புக்களைத் தடுக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றார் .எல்லையைத் தாண்ட வேண்டாம், சிக்கலைத் தூண்ட வேண்டாம், இது மேலும் எல்லை நிலைமையை சிக்கலாக்கும் எனவும் இந்த பிரச்சனையில் இந்தியா ஒருதலைப்பட்ச நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறினார் .
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…