இந்தியா தடுப்பூசி போடும் திட்டத்தை துரிதப்படுத்தாவிட்டால் கொரோனாவின் 3ஆம் அலை தவிர்க்க முடியாது என ஐஐடி ஹைதராபாத் கல்வி நிறுவன பேராசிரியரும் விஞ்ஞானியுமான வித்தியாசாகர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவை ஒழிப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி அனைவரும் போட்டுக் கொள்வது தான் தீர்வு என தற்போது மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. ஹைதராபாத்தில் ஐஐடி கல்வி நிறுவன பேராசிரியர் வித்யாசாகர் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில் எட்டு மாதங்களில் ஆண்டிபாடிகள் அளவு குறைந்து நோய் எதிர்ப்பும் திறனும் குறைந்துவிடுகிறது என இத்தாலி நாட்டின் மருத்துவமனை ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இதை சுட்டிக்காட்டிப் பேசிய ஐஐடி பேராசிரியர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபாடிகள் குறையத் துவங்கும் பொழுது, நோய் எதிர்ப்பு திறன் குறைய வாய்ப்புள்ள.து எனவே நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு இரண்டாம் முறையும் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி நடக்குமானால் மற்றொரு புறம் கொரோனா தடுப்பு ஊசி திட்டத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஆறு முதல் எட்டு மாதங்களில் கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவில் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் செப்டம்பர் 2020 இல் கொரோனா வைரஸ் உச்சம் தொட்ட பின்னர் அக்டோபரில் தேசிய அளவில் குறையத் தொடங்கியது எனவும், பின்பு மார்ச் மாதம் 2021ல் மீண்டும் இரண்டாம் முறையாக தொற்று வேகம் எடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்பொழுதே தடுப்பூசித் திட்டத்தை துரிதப்படுத்தி கொரோனா தடுப்பு விதி முறைகளை முறையாகக் கையாண்டு இருந்தால் இப்பொழுது இந்த இரண்டாவது அலை ஏற்பட்டிருக்காது என நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…