15 கோடி இந்தியர்கள் பயன்படுத்தும் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே
மத்திய மந்திரி ராம்தாஸ் அதாவாலே பிரபல பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் .
இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைப்பகுதியில் திங்கட்கிழமை இரவு இரு தரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் ஒரு கர்னல் உட்பட இருபது இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் .இதனால் சீனாவுக்கு எதிராக குரல் எழுந்துள்ளது .பலர் சீன பொருட்கள் ,உணவுகளை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளம் முதல் வீதி வரை பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .
இந்நிலையில் சீனாவை பொருளாதார ரீதியாக வீழ்த்த சீன பயன்பாடான டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கூறியுள்ளார் . சுமார் 15 கோடி இந்தியர்கள் இந்த சீன செயலியை பயன்படுத்துகின்றனர், இதன் காரணமாக அண்டை நாடு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகிறது.டிக்டாக்கை நிறுத்துங்கள்! டிக்டாக்கை புறக்கணிக்குமாறு அனைத்து இந்தியர்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதாவலே இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
चिनी व्हीडियो ऍप टिकटॉक पर भारत मे पाबंदी लगाई जाये .भारत के 15 करोड लोग टिक टॉक इस्तमाल करते है जीस वजह से चीन को करोडो का मुनाफा होता है. चीन को आर्थिक स्तर पर घेरणे के लिये टिकटॉक बंद करे!सारे भारतीयोसे मेरा नम्र निवेदन है की टिकटॉक का बहिष्कार करे! pic.twitter.com/ZDNNBmwIeP
— Dr.Ramdas Athawale (@RamdasAthawale) June 19, 2020