ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்துள்ள இந்தியா – பிரதமர் ட்வீட்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது என பிரதமர் ட்வீட்.
இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கான சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து, பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ட்வீட்
பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 400 பில்லியன் அமெரிக்க டாலர் சரக்கு ஏற்றுமதி என்ற இலக்கை இந்தியா முதன்முறையாக எட்டி சாதனைப் படைத்துள்ளது. இந்த இலக்கை எட்ட காரணமான விவசாயிகள், நெசவாளர்கள், எம்.எஸ்.எம்.இ.-க்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய ஆத்மநிர்பர் பாரத் பயணத்தில் இது முக்கிய மைல்கல் எனத் தெரிவித்துள்ளார்.
India set an ambitious target of $400 Billion of goods exports & achieves this target for the first time ever. I congratulate our farmers, weavers, MSMEs, manufacturers, exporters for this success.
This is a key milestone in our Aatmanirbhar Bharat journey. #LocalGoesGlobal pic.twitter.com/zZIQgJuNeQ
— Narendra Modi (@narendramodi) March 23, 2022