கொரோனா பரவலை தீர்மானிக்க இந்தியா செரோ கணக்கெடுப்பு – ICMR திட்டம்.!
கொரோனா பரவலை தீர்மானிக்க இந்திய முழுவதும் செரோ கணக்கெடுப்பை நடத்த ICMR திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலின் அளவை தீர்மானிக்க இந்திய முழுவதும் செரோலாஜிக்கல் கணக்கெடுப்பை நடத்த ஐ. சி. எம். ஆர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது புதிய மக்கள் தொகையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் வெளிப்பாட்டை தீர்மானிக்க புதிய செரோ கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அது இந்தாண்டு மே மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மே மாதத்தில் நடத்தப்பட்ட செரோ கணக்கெடுப்பு (இரத்த மாதிரி அடிப்படையில்) இறுதி முடிவுகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாக சுகாதார அமைப்பின் சிற்ப்பு செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். 83 மாவட்டங்களில் 65 மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி முதல் பகுதியில் 0.75 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக நடைப்பெற்ற செரோ கணக்கெடுப்பு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. முதலாவதாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியும், இரண்டாவதாக கட்டுபாட்டு பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடுகிறது.
சில மாநிலங்களை குறித்த தகவலை ஐ. சி. எம். ஆரின் வட்டாரங்கள் குறிப்பிடவில்லை . அதாவது மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ஆம்பான் சூறாவளி காரணமாக அங்குள்ள தகவல்களை பெற இயலவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜூன் 27 முதல் ஜூலை 5 வரை 11 மாவட்டங்களில் தேசிய நோய் கட்டுபாட்டு மையம் (என்சிடிசி) நடத்திய டெல்லியின் குறிப்பிட்ட செரோ கணக்கெடுப்பின்படி எடுக்கப்பட்ட தகவல்களை ஒன்றிணைத்து செயல்பட்டு வருவதாக பூஷண் கூறினார்.