ஈரான் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு கைப்பற்றிய இந்தியா.!

Sarbananda Sonowal

சென்னை : ஈரான் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு இந்தியா கைபற்றியுள்ளது.

ஈரானின் மூலோபாய சாபஹர் துறைமுகத்தை மேம்படுடைத்த இந்தியா 10 ஆண்டுகளுக்கு டெண்டர் எடுத்துள்ளதாக மத்திய நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று ஈரானுக்கு புறப்பட்டு சென்ற சர்பானந்தா சோனோவால் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சபஹார் துறைமுகத்தில் ஈரானின் சபஹர் துறைமுகத்துடன் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா ஒப்பந்தம் செய்வதற்கான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதனை தொடர்ந்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் இந்த நிகழ்வு நடந்து இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக பதிவிட்டுள்ளார் ” ஈரானின் தெஹ்ரானில், சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஹே மெஹர்தாத் பஸ்ர்பாஷ்  முன்னிலையில், சபஹர் துறைமுக செயல்பாடுகளுக்கான நீண்ட கால இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியா மற்றும் ஈரான் உறவுகளை வரலாற்று தருணத்தை உருவாக்கும் விதத்தில் ரானின் மூலோபாய சாபஹர் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகளுக்கு மேம்படுத்தி இயக்கும். பிரதமர் மோடி அவர்களின் இடைவிடாத முயற்சியால் நடைபெற்றுள்ளது.  இந்த ஒப்பந்தம் இரண்டு பெரிய நாடுகளுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய சரக்கு போக்குவரத்து மற்றும் கடல்சார் துறையில் இந்தியாவின் உறுதியான காலடி தடத்தை பதித்துள்ளது.

ஈரான், ஆப்கானிஸ்தான், யூரேசியா மற்றும் மத்திய ஆசிய குடியரசுகளுக்கு இந்தியாவிற்கு மாற்று வர்த்தக வழியை வழங்குவதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்தும் மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையை இது உணர்த்துகிறது. சபாஹர் துறைமுகத்தின் இந்தியாவின் ஒப்பந்தம், உலகளவில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்” எனவும் சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார். 

மேலும், இந்த 10 ஆண்டுகால ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனமான இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (ஐபிஜிஎல்) சபஹர் துறைமுகத்தில் சுமார் கிட்டத்தட்ட 120 மில்லியன் அமெரிக்க டாலரில்  முதலீடு செய்யவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்