மிரட்டல் விடுத்த அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இன்று எஸ் 400 ரக ஏவுகணை குறித்து இந்தியா -ரஷ்யா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அதனைப் புறக்கணித்த இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடியும் இன்று கையெழுத்திட்டார்.
இந்த ஏவுகணை தரையிலிருந்து பாய்ந்து சென்று எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாகும்.மேலும் இந்த எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டது.இந்நிலையில் சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
இதை அடுத்து இந்தியா-ரஷ்யா இடையே நடைபெறவுள்ள 19-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க உள்ளனர்.இந்த சந்திப்பி அமெரிக்க அதிபர் டிரம்பை அதிருப்தியடைவைத்துள்ளதாக தெரிகிறது.
இருதரப்பு வர்த்தக உறவை பலப்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிய வருகிறது.
இந்நிலையில் இந்தியா அமெரிக்காவின் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை அறிவித்த டிரம்பிற்கு இந்தியா என்றும் அஞ்சாது என்று தெரிவிக்கும் விதத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…