பாகிஸ்தானைச் சேர்ந்த 500 பேருக்கு இந்தியா விசா வழங்க மறுப்பு !!!!
- ஆஜ்மீர் தர்காவில் வழிபட வியாழக்கிழமை வருகை தருவதற்கு இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 500 பேருக்கு இந்தியா தூதரகம் விசா வழங்க மறுத்து விட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் வழிபட வியாழக்கிழமை வருகை தருவதற்கு இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 500 பேருக்கு இந்தியா தூதரகம் விசா வழங்க மறுத்து விட்டது. இதை பாகிஸ்தான் மந்திரி பீர் நூர் உல் ஹக் காத்ரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பீர் நூர் உல் ஹக் காத்ரி மேலும் கூறுகையில் இது தொடர்பாக 500 பேருக்கும் தகவல் அனுப்பி உள்ளோம்.
மேலும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வருவதற்கு கடந்த ஓராண்டில் 5,600 சீக்கிய பக்தர்களுக்கு விசா வழங்கப்பட்டது. அதேபோல் 312 இந்து பக்தர்களுக்கும் விசா வழங்கியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.