கொரோனா தொற்றில் பிரேசிலை முந்தி 2 வது இடத்தில் இந்தியா.!

Default Image

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்காவிற்குப் பிறகு உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இதுவரை இந்தியாவில் 4,202,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 71,687 பேர் உயிரிழந்துள்ளனர், 3,247,297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 91,723 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1008 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 883,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிக்கையின் படி, உலகளவில் கொரோனா தொற்றில் முதலிடம் இருக்கும் அமெரிக்காவில் இப்போது 62 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளன. இதில் 1.88 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்தியா தற்போது பிரேசில் நாட்டை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தில் உள்ளது .

இதற்கிடையில், இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக விளங்கும் மகாராஷ்டிராவில் 9,07,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது, இதில் ஏற்கனவே 26,000 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். மகாராஷ்டிராவுக்குப் பிறகு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாநிலமாக ஆந்திரா உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
heavy rain
TATAIPL 2025 begin
Rohit Sharma
FairDelimitation
varun chakravarthy kkr
EdappadiPalaniswami