கொரோனா பாதிப்பில் உலகின் 10 வது இடத்தில் இந்தியா!

உலகம் முழுவதுமான கொரோனா பதிப்பில் 10 வது இடத்தில் இந்தியா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை உலகம் முழுவதும் 5,590,358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் சில நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அதில் ஒன்றாக இந்தியாவிலும் இதனை தாக்கம் பன்மடங்காக அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 144,950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் மட்டும் 6,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் 4,172 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா அதிகம் பதித்துள்ள நாடுகளில் இந்தியா 10 வது இடத்தில உள்ளதாம்.