உலக நாடுகளுக்கு புதிய அதிர்ச்சி… மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா.. ஆய்வில் தகவல்…
- வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா கடந்த காலத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்தது இருந்தது.
- ஜெர்மனியையும் , ஜப்பானையும் பின்னுக்கு தள்ளி மூன்றாவது நாடாக மாறும் என தகவல்.
எரிபொருட்களிலிருந்து விலகி மாற்று எரிபொருளுக்கு அனைத்து நாடுகளும் செல்லும்போது, உலகளவில் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவுதி அரேபியா மாறலாம் என்று தற்போது ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சர்வதேச நாணய நிதியத்தால் 1,33.4 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார சீனா நாட்டின் 139.7 கோடிக்கும் குறைவாக இருந்தது. ஆனால் சீனாவின் மக்கள் தொகை திறம்பட தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.3 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2050 ஆம் ஆண்டில் 170 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாற உள்ளது. ஆனால் உழைக்கும் வயதினர் சீன மக்கள் தொகையில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றனர்.
இந்தியாவில் 100 கோடி கூடுதல் மக்கள் தொழிலாளர் சக்தியில் புதிதாக நுழைகிறார்கள். இதேபோல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருடாந்திர விகிதங்கள் 2018 முதல் 2023 வரை 7.1 சதவீதம், , 2023 முதல் 2028 வரை 7.1 சதவீதம் மற்றும் 2028 முதல் 2033 வரை 7.1 சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தற்போது உலகின் ஏழாவது பெரிய பொருளாதார நாடாகும். சமீபத்திய தரவுகளின் படி, இந்தியா 2017ல் பிரான்சை பின்னுக்கு தள்ளி ஆறாவது இடத்திற்கு முந்தியது. ஆயினும், 2018ல் மீண்டும் வீழ்ச்சியடைந்தது.இந்த ஆண்டு உலக பொருளாதார லீக் அட்டவணையில் இந்தியா ஐந்தாவது இடத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் 2025ம் ஆண்டில் நம் இந்தியா, ஜெர்மனியையும் 2030ம் ஆண்டில் ஜப்பானையும் முந்திக்கொண்டு உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) வெளியிட்டு உள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.