அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி புதிய உச்சத்தைப் பெற்ற இந்தியா.! எதுலன்னு தெரியுமா.?
- இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 7 சதவிகித வளர்ச்சியை எட்டியதுடன், 158 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
- சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில இந்தியாவும் உள்ளது. இதற்கு முன்பாக, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா இருந்து வந்தது.
இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து புது புது மால்களை அறிமுகம் செய்து மக்களை விரைவாக கவர்ந்து வருகிறது. என்னினும் இறக்குமதியும், அதிகமாகியுள்ளது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை 7 சதவிகித வளர்ச்சியை எட்டியதுடன், 158 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில இந்தியாவும் உள்ளது. இதற்கு முன்பாக, இரண்டாவது இடத்தில் அமெரிக்கா இருந்து வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு ஆய்வின் அடிப்படையில், மொத்த சந்தை மதிப்பில் 28 சதவிகித பங்கை ஜியோமி நிறுவனம் கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தில் சாம்சங் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் விவோ நிறுவனமும் உள்ளன. மேலும் சாம்சங்கின் சந்தைப் பங்கு 21 சதவிகிதமும் மற்றும் விவோ நிறுவனத்தின் பங்கு 16 சதவிகிதமாகவும் உள்ளது.