இங்குள்ள பிரச்சினைகளை பிரதமரும் அவரது அரசும் இதுவரை புரிந்துகொள்ளவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் கடும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன்விளைவாக உயிரிழப்புகளோ நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. தற்போது கொரோனா வைரசின் 2 வது அலை நாட்டில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து பூஞ்சை தொற்று நோய்களோ வித விதமாக மக்களிடையே பரவி அவர்களின் உயிரைக் குடித்துவருகிறது. மேலும் ஆங்காங்கே தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் வாட்டி எடுக்கின்றது. இந்த சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும், நானும், பல மக்களும் கொரோனா தொற்றுநோய் குறித்து பல முறை மத்திய அரசை எச்சரித்தோம்.
ஆனால், அரசு எங்களை கேலி செய்தது. இதனை சற்றும் பொருட்படுத்தாமல் பிரதமர் கொரோனா தொற்றுக்கு எதிராக வெற்றி பெற்றதாக அறிவித்தார். இங்குள்ள பிரச்சினைகளை பிரதமரும் அவரது அரசும் இதுவரை புரிந்துகொள்ளவில்லை. கொரோனா தொற்றை நிறுத்த 3-4 வழிகள் உள்ளன.
இவற்றில், நிரந்தர தீர்வு தடுப்பூசி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு என்பது ஒரு ஆயுதமாகும். இருப்பினும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், எனவே இது ஒரு தற்காலிக தீர்வாகும். மேலும் சமூக இடைவெளியும், முகமூடிகளை அணிவதும் கோவிட் வைரசுக்கு எதிரான தற்காலிக தீர்வுகளே என்று கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…