கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்ஹள்ளி டவுன் பகுதியில் உள்ள புடர்சிங்கி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் கதவுகளில் சாக்குக்கட்டியா பாகிஸ்தானுக்கு ஆதரவான வரிகள் எழுதப்பட்டுள்ளது. அந்தப்பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் நேற்று வழக்கம்போல பள்ளி திறக்கப்பட்டது. அப்போது பள்ளியை திறக்கவந்த ஆசிரியர்கள் கன்னடத்தில் எழுதப்பட்டிருந்த பாகிஸ்தான் ஆதரவு வரிகளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பள்ளிக்கதவுகளில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்றும் மற்றும் ‘திப்புசுல்தான் பள்ளி’ என்றும் வரிகள் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாகிஸ்தான் ஆதரவு வரிகளை பள்ளி கதவுகளில் எழுதி சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஒன்றும் அறியாத மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் சுவர்களில் இப்படி பிரிவினையை தூண்டும் விதமாகவும் நாட்டுப்பற்றை கேளிக்கூத்தாக்கும் இத்தகைத வரிகளை எழுதிய கயவர்களை விரைந்து கைது செய்து தகுந்த தண்டனை வாங்கித்தரவேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…